ETV Bharat / city

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்!

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடக்கிறது.

Voter Special Camp
Voter Special Camp
author img

By

Published : Nov 21, 2020, 7:43 AM IST

Updated : Nov 21, 2020, 9:02 AM IST

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டபேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டபேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஜனவர் 1-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2021 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 13ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4 , 5 , 6 , 8 , 9 , 10 , 13 மற்றும் வாக்கு சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது பெயர்கள், குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (2003ஆம் ஆண்டு ஜன 1ஆம் தேதிக்கு முன்பிறந்தவர்கள்) படிவம் 6-னை பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7 -னை பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்தும், சட்டப்பேரவை தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8 A-னை பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

அதேசமயம், 21.11.2020, 22.11.2020 , 12.12. 2020 மற்றும் 13.12.2020 ( சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ) ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட 3,754 வாக்குச்சாவடிகள் அடங்கிய 902 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறவுள்ளது. அம்மையத்தில் பொது மக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்க்கவும் செய்யலாம்.

மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்காலம். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொது மக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் மாவட்ட தேர்தல் அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம்...!

Last Updated : Nov 21, 2020, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.