தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால், பிப்ரவரி 28ஆம் தேதிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்துவருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான சுவரொட்டிகள், பேனர், பெயர்ப் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சிப் பிரமுகர்கள் மீது, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், கண்காணிப்புக் குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
ரவுடிகள், துப்பாக்கிகள்
வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதையும், காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர். தேர்தலின்போது எந்தவித அசாம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்க, சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் குற்றப்பதிவேடு ரவுடிகளைக் கண்டறிந்து காவல் துறையினர் சிறையில் அடைத்துவருகின்றனர்.
வழக்குகள்
இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதிமுதல் இன்று (மார்ச் 29) காலைவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 265 வழக்குகள் பதிவுசெய்துள்ளதாகவும், பணம், விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுசென்றதாக 256 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கையெழுத்து
உரிமம் பெற்ற 1,799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 42 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் 1,916 ரவுடிகளிடம் பிரமாண பத்திரத்தில் ஆறு மாதம் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாமலிருக்க கையெழுத்துப் பெற்றுள்ளதாகவும் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தேர்தல் விதிகளை மீறும் அலுவலர்களுக்கு தண்டனை: திமுக எம்.பி. ஈடிவி பாரத்துக்கு பேட்டி '