ETV Bharat / city

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியே தீருவோம் - அடம் பிடிக்கும்  இந்து முன்னணி - விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

சென்னை: கோயில்களை காத்திடவே இந்துக்கள் ஒன்றிணைவோம் என்ற நோக்கத்துக்காக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட உள்ளோம். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாட்டில் 1.25 லட்ச சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது என இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

vinayagar chathurthi celebration
vinayagar chathurthi
author img

By

Published : Sep 1, 2021, 11:42 AM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் துணை தலைவர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், 5 பேர் வரை சென்று சிலைகளை கரைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அந்த தீர்ப்பு பொருந்தும்.

நீதிமன்ற தீர்ப்பின்படி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாட்டில் 1.25 லட்சம் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

கடந்த 38 ஆண்டு காலமாக பொது விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.. சிலை வைப்பதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டது கிடையாது. ஒலிப்பெருக்கி வைப்பதற்கு மட்டுமே அனுமதி கேட்டுள்ளோம். அதனால் இந்த ஆண்டும் காவல் துறையிடம் அனுமதி கோர போவதில்லை.

இந்து வழிபாட்டுக்கு எதிரானவர்களை எதிர்ப்போம்

நகைப்பான பத்திரிகை செய்தியாக இந்த அனுமதி மறுப்பை இந்து முன்னனி பார்க்கிறது.
விதியை மீறி 63 இடங்களில் வேளாங்கண்ணி தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியிலும் எதிர்ப்பு இருந்தது. இந்துக்களின் வழிபாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானவர்களை கடுமையாக எதிர்ப்போம். திட்டமிட்டு இந்து பண்டிகைகளை குறிவைத்து தாக்குகிறார்கள்.

கோயில்களை காத்திடவே இந்துக்கள் ஒன்றிணைவோம் என்ற நோக்கத்துக்காக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை இந்து முன்னணி கொண்டாட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: தென்காசியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் - தலைமை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.