ETV Bharat / city

'தாலிக்குத் தங்கம் திட்டத்தைக் கைவிடக்கூடாது' - கூட்டணியில் இருந்து திமுகவிற்கு எதிராக ஒலித்த கலக குரல்! - ஏழைகளுக்கு உதவும் திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் திட்டத்தைக் கைவிடக் கூடாது

ஏழை, எளிய பெண்களுக்கு உதவிய திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடக்கூடாது என தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

விஜயதாரணி எம்எல்ஏ
விஜயதாரணி எம்எல்ஏ
author img

By

Published : Apr 6, 2022, 5:51 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று (ஏப்.6) தொடங்கியது. கூட்டத்தில் துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெறுகையில், சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி பேசினார்.

திருமண உதவித்தொகை: அப்போது அவர், 'கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வீடு கட்டும் திட்டத்திற்குக் கொடுக்கப்படும் நிதி உதவி ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிதி உதவியும் சேர்த்து வழங்க வேண்டும்' என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: திருமண உதவித்தொகை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.