ETV Bharat / city

ஏடிஎம்மில் பணநிரப்பக் கொண்டு சென்ற ரூ.52 லட்சம் அபேஸ்! - விஜயா வங்கி ஏடிஎம் பணம் கொள்ளை

சென்னை: ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப கொண்டுச் சென்ற ரூ.52 லட்சம் ரொக்கப்பணத்தை, கார் ஓட்டுநர் கடத்திச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏடிஎம் பணம் கொள்ளை, சென்னை ஏடிஎம் பணம் கொள்ளை, விஜயா வங்கி ஏடிஎம் பணம் கொள்ளை, vijaya bank Atm money theft in chennai
விஜயா வங்கி ஏடிஎம் பணம் கொள்ளை
author img

By

Published : Dec 20, 2019, 2:12 PM IST

சென்னை விஜயா வங்கி ஏடிஎம் (தற்போது பாங்க் ஆஃப் பரோடா) மையங்களில் பணம் செலுத்த சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் நான்கு ஊழியர்கள் காரில் ரூ. 87 லட்சம் பணத்துடன் சென்றுள்ளனர். அப்போது முதலில் தேனாம்பேட்டையில் உள்ள விஜயா ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பி விட்டு வேளச்சேரி வந்துள்ளனர்.

பின்னர் வேளச்சேரி விஜயநகர் ஒன்றாவது பிரதான சாலையிலுள்ள விஜயா வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப மூன்று ஊழியர்கள் ஏடிஎம் உள்ளே சென்றனர். அப்போது திடீரென கார் ஓட்டுநர் சுமார் ரூ.52 லட்சம் பணத்துடன் காரை எடுத்துச் சென்றுள்ளார்.

காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?

பின்னர் காரை ஓட்டிச்சென்ற அம்புரூஸ் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய அம்புரூஸை தேடி வருகின்றனர்.

Intro:Body:ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப கொண்டு வந்த 52லட்சம் ரூபாயுடன் கார் டிரைவர் தப்பியோட்டம்.

சென்னை விஜயா வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்த சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 4ஊழியர்கள் காரில் 87 லட்சத்துடன் வந்தனர்.அப்போது முதலில் தேனாம்பேட்டையில் உள்ள விஜயா ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பி விட்டு வேளச்சேரி வந்தனர்.

பின்னர் வேளச்சேரி விஜயநகர் 1வது பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎமிற்கு பணம் நிரப்ப 3 ஊழியர்கள் ஏடிஎம் உள்ளே சென்றனர். அப்போது திடீரென கார் டிரைவர் சுமார் 52லட்சம் பணத்துடன் காரை எடுத்து சென்றுவிட்டார். பின்னர் காரை ஓட்டி சென்ற டிரைவர் ஆம்புரூஸ் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.