ETV Bharat / city

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்: தேவைப்பட்டால் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்படும்! - 800 movie

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ரெட் கார்னர் நோட்டீசும் அனுப்பப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

vijay-sethupathi-daughter-threatened
vijay-sethupathi-daughter-threatened
author img

By

Published : Oct 23, 2020, 10:48 AM IST

இலங்கை பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர், அப்படத்திலிருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்தும், கண்டனமும் தெரிவித்துவந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் படத்திலிருந்து விலகினார். இதற்கிடையில், ரித்திக் என்பவர் சமூக வலைதளத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். அதனால் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள வழக்கு தொடர்பாக வெளிநாட்டில் உள்ள நபரை விசாரிப்பதற்கு, அந்நாட்டு அரசின் அனுமதி வேண்டும்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இலங்கை அரசின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த ப்ளு கார்னர் நோட்டீஸ் ஒரிரு வாரத்திற்குள் அனுப்பப்படும். ஒருவேளை விசாரணை நடத்தப்பட வேண்டிய நபர் தலைமறைவானால் அடுத்தக்கட்டமாக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி தேடப்படுவார் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.