பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்திவருவதால் தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி சென்னையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”முதல்முறையாக வாக்கு செலுத்தும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். 18 வயதில் நமது வீட்டில் நாம் முடிவெடுக்க நம்மிடம் கேட்பார்களா என்று தெரியாது.
ஆனால் இந்த நாட்டில் நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். நானும் வாக்கு செலுத்திவிட்டேன். நல்லது நடக்கும் என்று அனைவரைப் போல் நானும் காத்திருக்கிறேன்” என்றார்.