ETV Bharat / city

ஆதரவும் வேண்டாம் கூட்டணியும் கிடையாது - விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு - கூட்டணி கிடையாது விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியோடும் கூட்டணியோ அல்லது கட்சியின் ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம், Vijay Makkal Iyakkam, Bussy Anand, புஸ்ஸி ஆனந்த்
விஜய் மக்கள் இயக்கம்
author img

By

Published : Feb 8, 2022, 10:42 AM IST

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் உத்தரவின்படி 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்தக் கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது.

எனவே, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்டத் தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பரப்புரை செய்து, நடிகர் விஜய், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகச் செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 115 பேர் வெற்றிபெற்றனர். அவர்களை சென்னைக்கு அழைத்து விருந்து அளித்த நடிகர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவு- பில்லா ஜெகன் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.