இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிப்பு, வாத நோய்க்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு விகாபட்ரின் (Vigabatrin) மாத்திரைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையானது, வெளியுறவுத்துறை அமைச்சகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உதவியுடன் ஹாங்காங் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து விகாபட்ரின் மாத்திரைகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் முதல்கட்டமாக ரூ. 8 லட்சம் மதிப்பிலான 3400 மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் அசோக் பாபு ஐபிஎஸ், கொள்முதல் செய்தார். பின்னர், மாத்திரைகளை சமூகநலம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தார். இம்மாத்திரைகள் மருந்து சீட்டினை அடிப்படையாகக் கொண்டு வலிப்பு, வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.