சென்னை: அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் காவல்துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும், பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் காவல்துறையினர் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மணலியில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் சென்னை மாநகர பேருந்தில் சாதாரண உடையில் ஏறிய காவலர் ஒருவரிடம் நடத்துனர் பயண சீட்டு எடுக்கும்படி கூறியுள்ளார்.
நான் காவலர், டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை என கூறியதால் நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டிஜிபி தான் வாரண்ட் இல்லாமல் செல்லும் காவலர்கள் டிக்கெட் எடுக்க சொல்லி உள்ளார், சீருடையில் நீங்கள் இல்லை. ஆகையால் டிக்கெட் எடுக்கும்படி பேருந்து ஓட்டுனர் காவலரிடம் தெரிவிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கழிவு நீரில் கீரையை கழுவும் வியாபாரி... கோவையில் அதிர்ச்சி சம்பவம்!