ETV Bharat / city

கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி மாற்றம் - டிஎன்பிஎஸ்சி - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசின் தைப்பூசம் பொதுவிடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து, அன்று நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி மாற்றம்

author img

By

Published : Jan 7, 2021, 10:32 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு தைப்பூச நாளை அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனால் அந்தத் தேதியில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்தப் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசால் 28ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்று நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஜனவரி 29, 30ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி நேர்முகத் தேர்விற்கு அடைக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்விற்கான அழைப்பாணை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்றால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

தேர்வு முடிவு வெளியீடு

2018-19ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொதுப்பணிகளுக்கு 13 உதவி இயக்குநர் பணியிடங்களில் நிரப்புவதற்கும், 89 குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் இடங்களை நிரப்புவதற்கும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு பொதுப்பணிகளுக்கு உதவி இயக்குநர் தேர்வினை 2,955 பெண்களும், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிக்கு 3,187 பெண்களும் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகள்படி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ச்சிப் பெற்றவர்கள் ஜனவரி 13ஆம் தேதிமுதல் 25ஆம் தேதிக்குள் தங்களின் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 249 தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்கள் நலப் பணியாளர்கள் ரத்தம் விற்கும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.