சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, நாமக்கல், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவம் பி.விஎஸ்சி, பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் கால்நடை பண்ணை தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் www.tanuvas.ac.in | www.2.tanuvas.ac.in ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பி.விஎஸ்சி, பி.டெக் பவுல்ட்ரி, பி.டெக் உணவு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.