இது குறித்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவில் தமிழ்நாடு அளவில் புதிய பதவிகள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாஜக தமிழ்நாடு மாநில இளைஞர் பிரிவு(கிருஷ்ணகிரி கிழக்கு) துணைத் தலைவராக வீரப்பனின் மகள் வித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் மாநில OBC அணி மாநில துணை தலைவராகவும், இயக்குநர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா பாஜக கலை கலாசார பிரிவு மாநில செயலாளர்களாகவும், நடிகர் ராதாரவி, விஜய்குமார், கங்கை அமரன் ஆகியோர் மாநில செயர்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.