சென்னை: பிறந்து 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு மூளையில் ஏற்பட்டிருந்த மிகவும் அரிய வகையிலான ரத்த நாளக் கோளாறான வெய்ன் ஆஃப் காலென் மால்ஃபார்மேஸன் (Vein of Galen malformation) ஏற்பட்டிருக்கிறது.
இது பொதுவாக பிறக்கும் குழந்தைகளில் 30 லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மிக அரிதாக காணப்படும். இக்கோளாறானது பிரசவத்திற்கு முன்பே தாய் கருவுற்றிருக்கும் போதே கண்டறியப்பட்டுவிட்டது.
சிசுவுக்கு மூளை ரத்த நாள கோளாறு
குழந்தை பிறந்தவுடன் அதற்கு, எண்டோவாஸ்குலர் எம்போலிசேஸன் (Endovascular Embolization) முறையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து அவசர கால ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இதையடுத்து, பிரசவத்திற்காக கர்ப்பிணி, தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறப்பதற்கு முன்பே நோய் கண்டறியப்பட்டு, சிசேரியன் (Cesarean) சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து, பிறந்த குழந்தையின் மூளையின் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள வெய்ன் ஆஃப் காலென் மால்ஃபார்மேஸன் (Vein of Galen malformation) கோளாறு காரணமாக குழந்தையின் இதயம் செயலிழக்கத் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழக்கத் தொடங்கின. பிறந்து 48 மணி நேரமே ஆன புதிய சிசுவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள நோயை, சென்னை தனியார் மருத்துவமனையின் நீயூரோ-எண்டோவாஸ்குலர் (Neuroendovascular) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை மூலம் குழந்தை மீட்பு
இந்த அறுவை சிகிச்சையை நரம்பியல் சிகிச்சை பிரிவின் தலைவர் சீனிவாசன் பரமசிவம் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் வெற்றிகரமாக குழந்தையின் மூளையில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்தனர்.
இதுகுறித்து, சென்னை தனியார் மருத்துவமனையின் நீயூரோ-எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவர் சீனிவாசன் பரமசிவம் கூறுகையில், "மிகவும் அரியவகை கோளாறான வெய்ன் ஆஃப் காலென் மால்ஃபார்மேஸன் (Vein of Galen malformation) காரணமாக மூளையில் உள்ள ரத்த நாளங்களில் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
மூளை ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்படுவதால், இதயம், நுரையீரலுக்கு கூடுதல் ரத்தம் பாயும். இது மூளையில் ரத்த அழுத்த நிலையை உருவாக்குகிறது.
நரம்பியல் மருத்துவக் குழுவால்...
இதன்காரணமாக உடல் ஓய்வாக இருக்கும்போது கூட, மூளை ரத்த நாளங்கள் கூடுதல் வேலைப் பளுவுடன் இயங்க வேண்டியநிலை ஏற்படுகிறது.
இதனால், இக்கோளாறு காரணமாக பிறந்த குழந்தைகளுக்கு இதயம் செயலிழக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத் தாயின் கர்ப்ப காலத்திலேயே வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே கண்டறிந்து, குழந்தை பிறந்தவுடன் உடனடியாக அதற்கான சிகிச்சையை அளிக்க முன்கூட்டியே தயாரானோம்.
ஒரு சிக்கலான, சவாலான சிகிச்சையை அளித்தோம். அரிய வகையான வெய்ன் ஆஃப் காலென் மால்ஃபார்மேஸன் (Vein of Galen malformation) கோளாறை, எண்டோவாஸ்குலர் எம்போலிசேஸன் (Endovascular Embolization) முறையைப் பின்பற்றி மிகவும் வெற்றிகரமாக செய்துமுடித்தோம்" என்றார்.
இதையும் படிங்க: 'விரைவில் கரோனா டெல்டா வைரஸ் கண்டறியும் ஆய்வகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்'