ETV Bharat / city

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் செல்லும் அரசு! - attorney general shanmuga sundaram

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில், முந்தைய ஆட்சியில் அவசர காலத்தில் சட்டம் இயற்றப்பட்டதாகவும், உள் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உரிமை உள்ளதாக தமிழ்நாடு அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செல்ல அரசு தயாராக உள்ளதாகவும், கட்டாயம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து
author img

By

Published : Nov 1, 2021, 3:31 PM IST

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச்சட்டத்தின் மூலம் இந்தாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விகளுக்கும் மாணவர் சேர்க்கை உள் ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் நடைபெறும் என அரசு அறிவித்தது.

இட ஒதுக்கீட்டால் பிற பிரிவு பாதிப்பா?

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே. முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

இட ஒதுக்கீடு, அரசின் கொள்கை முடிவு

தமிழ்நாடு அரசுத்தரப்பில், "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983இல் நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.01 விழுக்காடு வன்னியர் சமூகத்தினர் உள்ளதாக கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில், அரசியல் காரணங்களோ? அவசரமோ? ஏதுமில்லை.

மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே. இதனால், குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது. அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் விளக்கம்

இட ஒதுக்கீட்டில் அரசியல் இல்லை

இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில்," வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு.

முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்திரியர் பிரிவில் உள்ள ஏழு சமூகத்தினர் உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது" என வாதிடப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், "தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், இன்று (நவ. 1) இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதா? மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டிற்காக முறையான அளவுசார் தகவல்கள் எதுவும் இல்லாமல் அரசு இடஒதுக்கீடு வழங்க முடியுமா? உள்ளிட்ட 6 கேள்விகளை எழுப்பி அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆனால், இந்த கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி அரசு பிறபித்த சட்டவிரோதமானது என்பதால் அந்தச் சட்டம் செல்லாது" எனத் தீர்ப்பளித்தனர்.

பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி

சட்டமும் ரத்து; ஒதுக்கீடும் ரத்து

தொடர்ந்து, தீர்ப்புக்குப் பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும்

அப்போது இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் வகையில் தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

தலைமை வழக்கறிஞர் விளக்கம்

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்,"வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில், முந்தைய ஆட்சியில் அவசர காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. உள் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உரிமை உள்ளது.

மேல்முறையீடு செல்ல அரசு தயாராக உள்ளது, கட்டாயம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இட ஒதுக்கீட்டால் இடம் பெற்ற மாணவர்களுக்கு இப்போது பாதிப்பு இல்லை" என்றார்.

பாமக வருத்தம்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனவும் அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யும் என நம்புவதாகவும் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு: சட்டமும் ரத்து, ஒதுக்கீடும் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.