ETV Bharat / city

'அமுதசுரபியாக மாறிவிட்டது தமிழ்நாடு அரசு' - வைகோ - குழந்தைகளுக்கான நிவாரணத் தொகை

சென்னை : கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அமுதசுரபியாக மாறிவிட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : May 30, 2021, 6:03 PM IST

Updated : May 30, 2021, 7:02 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலால் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தப்படும். 18 வயது நிறைவடைந்த பின்னர் முழுத் தொகையும் வட்டியுடன் வழங்கப்படும். மேலும் பட்டப்படிப்பு வரையிலான கல்விச்செலவு அனைத்தையும் அரசே ஏற்கும்.

கரோனாவால் தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு நலத்திட்டங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் வசிக்கும் பெற்றோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'மணிமேகலை காப்பியத்தில் கையில் அமுத சுரபியுடன் காணார், கேளார், பேசார் போன்ற ஆதரவற்றவர்களுக்கு அள்ளி வழங்கியதைப்போல், தமிழ்நாடு அரசே அமுத சுரபியாக மாறிவிட்டது. மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிரூபித்துள்ளது. மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'உள்ளம் நிறைந்த கலைஞரை, இல்லத்திலே கொண்டாடுவோம்'

Last Updated : May 30, 2021, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.