ETV Bharat / city

'ராசி இல்லாதவர்' - கேலி, கிண்டலுக்கெல்லாம் வைகோ வைத்த முற்றுப்புள்ளி - Vaiko congrats stalin

'ராசி இல்லாதவர்' என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி உள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : May 4, 2021, 6:10 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராசியில்லாதவர். அவர் எந்த கட்சியில் கூட்டணி வைத்தாலும் அந்த கட்சி மண்ணை கவ்வும்” என்று அவர் மீது நீண்ட காலமாக வைக்கப்பட்ட விமர்சனத்தை அவர் தவிடு பொடி ஆக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.

10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் நுழையும் மதிமுக

தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும் வைகோ கடந்த தேர்தல்களில் கட்சி விட்டு கட்சி மாறியதாலும் அவர் எடுத்த சில முடிவகளாலும் சறுக்கலை சந்தித்தார். அப்போதிருந்தே அவர் இது போன்ற விமர்சனங்களுக்கு ஆளாகினார். ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களை பெற்ற மதிமுக நான்கு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அரியலூர் தொகுதியில் சின்னப்பா, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், வாசுதேவநல்லூர் தொகுதியில் சதன் திருமலைக்குமார், சாத்தூர் தொகுதியில் ஏ ஆர் ஆர் ரகுமான் ஆகிய மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்மூலம் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகு ( 2006-2011-க்கு பிறகு) மதிமுக வேட்பாளர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். 2011 தேர்தலின் போது வைகோ தேர்தலை புறக்கணித்தார். 2016இல் அவர் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டார்.

உடல்நலம் குன்றிய நிலையிலும் பரப்புரையை கைவிடாத வைகோ

கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட மதிமுக கட்சியின் கணேஷ மூர்த்தி வெற்றி பெற்று ஈரோட்டின் எம்பி ஆனார். இந்த வெற்றியெல்லாம் வைகோவின் அயராத உழைப்பாலும் தீவிர தேர்தல் பரப்புரையாலும் சாத்தியமானது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் அதை பொருட்படுத்தாது திமுக கூட்டணிக்கு தனது பரப்புரை மூலமாக ஆதரவு திரட்டினார்.

வாக்கு மாறாத வைகோ

அதேபோல் அவர் திமுக கூட்டணியில் இடம்பெற்றபோது, “நிச்சயம் ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும்வரை ஓயமாட்டேன்” என முழங்கினார். அவரது முழக்கம் தற்போது வெற்றியாக பிரதிபலித்துள்ளது. எந்த வைகோ ராசி இல்லாதவர் என்று ஏசப்பட்டாரோ அவரே அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தவிர்க்க முடியாத தலைவர்

தமிழ்நாடு அரசியலில் வைகோ தவிர்க்கமுடியாத நபராக இருக்கிறார். முல்லைப் பெரியாறு அணை போராட்டம், காவிரி நீர்ப் பங்கீடு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், நியூட்ரினோ போராட்டம், மது ஒழிப்பு போராட்டம், நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வைகோ அதற்காக சிறைச்சாலையும் சென்றிருக்கிறார். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தமிழினத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் எழுப்பிய குரல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.