சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் வசித்துவருகின்றனர். மிகவும் பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த இப்பகுதியில், நேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டிற்கு வெளியே ஒருவர் குடிபோதையில் காரை நிறுத்தி அதில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்ட, முதலமைச்சர் இல்ல நுழைவு வாயில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அந்த நபரிடம் சென்று, இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் காவலர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும், வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் தனக்குத்தானே சட்டையைக் கிழித்துக்கொண்டு, 'நான் யார் தெரியுமா?' என்று காவலர்களிடம் சத்தம் போட்டுள்ளார்.
திடீரென அங்கு ’ஜீப்’ வரும் சத்தம் கேட்டதும் காரை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றுள்ளார். யார் அந்த நபர்? எதற்காக அங்கு வந்தார்? என்பது குறித்து அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த அடாவடி போதை நபரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ''முதலமைச்சராக எனக்கும் ஆசையுண்டு'' - சைடு கேப்பில் கிடா வெட்டிய அமைச்சர் ஓ.எஸ். மணியன்