சென்னை: நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவது குறித்தும், ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்துவது குறித்தும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமெனப் பல்கலைக்கழக மானியக்குழு முரணாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
மேலும், 75ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் உயர் கல்வி நிறுவனங்களில் மூன்று லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஜனவரி 1ஆம் தேதிமுதல் பிப்ரவரி 7ஆம் தேதிவரை இந்நிகழ்வை நடத்த வேண்டுமெனவும், இந்நிகழ்வை உயர் கல்வி நிறுவனங்கள் முழுவீச்சில் பிரபலப்படுத்திக் கொண்டாடவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி:அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்