ETV Bharat / city

பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகள் போராடவில்லை- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

author img

By

Published : Dec 25, 2020, 8:56 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு, “பாஜக தலைமை தான் முடிவு செய்யும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார்.

prakash javadekar Press Meet
prakash javadekar Press Meet

சென்னை: தவறாக வழிநடத்தப்பட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு போன்ற புத்தகங்களை மேடையில் அறிமுகம் செய்தார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர், நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போது அங்கு பாஜகவின் கை மேலோங்கி, காங்கிரஸ் கட்சியின் கை கீழிறங்கிவிட்டது.

அதேபோல ராஜஸ்தான், ஹைதராபாத், கோவா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மேலும், பெரும்பாலான கட்சிகள் நாட்டில் குடும்பக் கட்சிகளாக உள்ளன. வரவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப அரசியல் இனிமேலும் எடுபடாது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வெற்றியை நிச்சயம் ஈட்டும் என நம்பிக்கை உள்ளது. மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் - திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு விவசாயிகளுக்கென எந்தவொரு நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகளுக்காகவும், வேளாண் துறைக்காகவும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் மீதுள்ள நம்பகத்தன்மையும், அவரின் தலைமைத்துவமுமே காரணமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று (டிச.25) பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள வேளாண்மை ஊக்க உதவித் திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் கோடி புதிய தவணைத் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டு அதன் வாயிலாக 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணம் சென்று சேர்ந்துள்ளது.

6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்கள் விளைப் பொருள்களை தாங்களே அதிக விலைக்கு விற்க பாஜக அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜகவின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. இந்த வருமானம் தற்போதைய வேளாண் சட்டங்கள் மூலம் வரும் 2022 ஆம் ஆண்டு மேலும் உயரும்.

மேலும், தவறாக வழிநடத்தப்பட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகளைத் தவிர வேறு எந்த மாநில விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடவில்லை.

வேளாண் சட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டவை அல்ல, ஏறத்தாழ 20 ஆண்டுகள் கலந்தாலோசித்து பல தரப்பினரிடம் கருத்துக்கேட்பு நடத்திய பின்னரே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கூட்டணி அதிமுகவுடன் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தங்கள் மாநில தலைவர்கள் கூறுவதுபோல் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.

கூட்டணி என ஒன்று இருந்தால் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது இயல்புதான். அதிமுக - பாஜக கூட்டணிக்கு மட்டும் இது விதிவிலக்கல்ல. அதுமட்டுமல்லாமல் திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிஎம் கிஷான் திட்டத்தை தடுப்பது ஏன்? மம்தா பானர்ஜிக்கு நரேந்திர சிங் தோமர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.