ETV Bharat / city

எம்ஜிஆர் அரசு திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்பு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

சென்னை: எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை படிப்பு: நடப்பாண்டிற்கான விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்

author img

By

Published : Jul 28, 2020, 9:24 PM IST

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கிவருகிறது.

இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வருகிறது.

2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று, கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை-காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்துவருகிறது.

தற்போது, 2020-2021ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுவருகிறது.

1. இளங்கலை - காட்சிக்கலை( ஒளிப்பதிவு)-Bachelor of Visual Arts(Cinematography)

2. இளங்கலை - காட்சிக்கலை(எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts(Digital Intermediate)

3. இளங்கலை - காட்சிக்கலை(ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts(Audiography)

4. இளங்கலை - காட்சிக்கலை(இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts(Direction and Screenplay writing)

5. இளங்கலை - காட்சிக்கலை(படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts(Film Editing)

6. இளங்கலை - காட்சிக்கலை(உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) - Bachelor of Visual Arts(Animation and Visual Effects)

இதற்கான விண்ணப்பங்களை 30.07.2020 முதல் 26.08.2020 வரை தபால் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு அரசின் www.tn.gov.in எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் 01.09.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் முதல்வர் (பொ), எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு அனுப்பட வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.