சென்னை: மாணவியரின் புகார்களை விசாரிக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழு துணைவேந்தர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘ நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.விரைவில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்நிலையில் உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட குழுவை உடனடியாக உருவாக்குவதில் தாமதம் கூடாது;தனி குழுவின் விவரங்களை பல்கலைக் கழக மானியக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு புகார் வந்ததன் காரணமாக மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வரதட்சணைக் கொடுமை வழக்குகள் மிகைப்படுத்தப்படுகின்றன..இரண்டு மாதங்களுக்கு கைது கூடாது -அலகாபாத் உயர்நீதிமன்றம்