திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ’ரஜினிகாந்த் தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி விவகாரம் தொடர்பாக பேசிவிட்டு பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார். அதைபோல் பெரியார் தொடர்பான தனது கருத்திலும், உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்புக் கேட்பார்’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ரஜினி வீரர்’ - எஸ்.வி. சேகர் சிறப்புப் பேட்டி