சென்னை: ஆவடி மாநகர திமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நிவாரண பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி அம்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிவாரண பொருள்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”எல்லா இடங்களிலும் எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூடவே இருக்கின்றனர்.
அனைத்து பாதிப்பும் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மு.க. ஸ்டாலின் உறுதிமொழி கொடுத்தது போல் மழை வெள்ள பாதிப்பு கண்காணிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, விரைவில் சரி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!