ETV Bharat / city

புகைப்படம் தவிருங்கள்... புத்தகம் தாருங்கள் - உதயநிதி - திமுக

எனக்கு பரிசுகள் அளிக்க விரும்பினால், புத்தகங்களைத் தாருங்கள், அது ஏதேனும் ஒரு ஏழை மாணாக்கருக்குப் பயன்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

udayanidhi stalin Statement
udayanidhi stalin Statement
author img

By

Published : Feb 12, 2021, 9:09 PM IST

சென்னை: தனக்குப் பரிசுகள் அளிக்க விரும்பினால் புத்தகத்தைத் தாருங்கள் என திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மக்களிடம் உள்ள எழுச்சியைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இச்சூழலில் சில தர்மசங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. உற்சாக மிகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர் என்னை வரவேற்று ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைப்பதைக் காண முடிகிறது. தயவுசெய்து அவற்றை அறவே தவிர்த்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல் சுவரொட்டிகளில் என் படங்களைப் பயன்படுத்தக்கூடாது. நம் கழகத்தைக் கட்டமைத்த பெரியார் - அண்ணா - கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய நான்கு தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் என்னை வரவேற்கும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கிறீர்கள். இதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

எனக்கு நினைவுப் பரிசுத் தரும் தோழர்கள் சால்வைகள்- பூங்கொத்துகள் - மாலைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களைப் பரிசளிக்குமாறு வேண்டுகிறேன். ஏற்கெனவே அப்படி நீங்கள் எனக்கு அளித்த புத்தகங்களை அரியலூரில் தங்கை அனிதாவின் பெயரில் இயங்கும் நூலகம் உள்பட பல்வேறு நூலகங்களுக்கு வழங்கினேன். இப்படி நீங்கள் தரும் புத்தகங்கள் பலர் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு வழங்க ஏதுவாக இருக்கும். எளிமையே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.