ETV Bharat / city

2 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 23-ல் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்! - ஓபிஎஸ்

வரும் ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

admk
admk
author img

By

Published : Jun 2, 2022, 8:51 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 500 பேரும், செயற்குழு கூட்டத்தில் 500 பேரும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆயிரம் பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு கரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் தற்போது பாஜக குறித்து பொன்னையன் பேசியது பேசு பொருளாக உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக நீடிக்கலாமா அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கொஞ்சம் என்னன்னு பார்த்து விசாரிங்க மோடி ஜி: அண்ணாமலை குறித்து எம்.பி செந்தில்குமார் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.