ETV Bharat / city

கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு ரவுடிகள் கைது...! - ரகளை

கொடுங்கையூர் பகுதியில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் மற்றொரு ரவுடியை தாக்குவதற்காக சுற்றிரிந்தததாக போலீசார் தெரிவித்தனர்.

ரவுடிகள் கைது
ரவுடிகள் கைது
author img

By

Published : Apr 27, 2022, 9:55 PM IST

சென்னை: சென்னை கொடுங்கையூர் அம்மன் கோவில் அருகே சிலர் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் மங்களாபுரத்தை சேர்ந்த சூர்யா (23) மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த ஜெயபால்(30) என்பதும், இவர்கள் இருவரும் ரவுடியாக இருந்து வந்ததும், இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் மங்களாபுரம் புது காலனி பகுதியை சேர்ந்த ரவுடி சுனில் என்கிற பிரபாகரனை (28) வெட்டுவதற்காக கத்தியுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மன அழுத்தத்தை குறைக்க ‘டான்ஸ் தெரபி’ - மகிழ்ச்சியில் சிறைக் கைதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.