செங்கல்பட்டு ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள காபி கடையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அங்கிருந்த இருவரிடமிருந்து, 7 கிலோ எடை அளவுக்கு கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த அயோலுவா டேவிட் அடேபாகின், ஒலுகு ஒலிசேமேகா இம்மானுவேல் ஆகிய இரு கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் விசாரித்தார். அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பர்மா பஜாரில் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்