சென்னை தாம்பரம் காவலர்கள் கறுப்பு பூஞ்சை மருந்தை ஆன்லைனில் விற்க முயன்ற இருரை கைது செய்தனர். ஏற்கனவே ஆன்லைனில் கறுப்பு பூஞ்சை மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது, சிரஞ்சீவி, பிரசாந்த ஆகிய இருவர் இதில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைதுசெய்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மீது தாம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.