சென்னை: இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு,மீண்டும் சாா்ஜா வழியாக இந்தியா திரும்பிய கேரளா,காஞ்சிபுரத்தை சோ்ந்த இருவரை,சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனா்.சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சஜன்(50), காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்த சூசை ராஜா (52) ஆகியோரின் பாஸ்போர்ட்களை சோதனையிட்டனா்.இருவரும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று சில மாதங்களுக்கு பின்பு சாா்ஜா வழியாக இந்தியா வந்துள்ளதை கண்டுப்பிடித்தனா்.இதையடுத்து இருவரையும் குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்து குடியுரிமை அதிகாரிகள்,கியூ பிரிவு மற்றும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா்.
ஏமன் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்த இந்தியர்கள் கைது இந்திய அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏமன்,லிபியா நாடுகளுக்கு இந்தியா்கள் யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளது.அந்த தடையை மீறி இந்தியா்கள் சென்றால் குற்றவியல் தண்டனை சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இருவரிடமும் நடந்த விசாரணையில்,தாங்கள் கட்டிட வேலைக்காக சாா்ஜா சென்றதாகவும்,ஆனால் அங்கு எங்களுக்கு சரியான வேலை அமையாததால்,ஏமனுக்கு அங்கிருந்து சென்றதாகவும்,ஏமனுக்கு செல்ல தடை குறித்து தங்களுக்கு தெரியாது என்றனா்.ஆனால் அதிகாரிகள் அவா்கள் விளக்கத்தை ஏற்காமல் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இருவரும் ஏமன் நாட்டில் தங்கியிருந்த போது, யாரிடம் தொடா்பில் இருந்தனா் மற்றும் அவர்களின் செல்போன் உரையாடல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்அதன்பின்பு குடியுரிமை அதிகாரிகள் நேற்று இரவு இரண்டு பேரையும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீசார் இருவரையும் கைது செய்தனா். மேலும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்