சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வாகினர். தொடர்ந்து இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் காலியான இரண்டு இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (செப்.22) நிறைவடைந்தது.
போட்டியின்றி தேர்வு
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செப்.23) நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை.
இதனால், திமுக சார்பில் மனுதாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். இதன்மூலம் போட்டியின்றி தேர்வாகும் இருவரும் மாநிலங்களவை செல்வது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு!