சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் டிவிஎம் எந்திரங்கள் பழுதடைந்துள்ளதால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 1.6 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்க பயணிகள் விரும்புவது இல்லை. டிவிஎம் எந்திரத்தில் டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில் அவைகள் வேலை செய்வதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, "சென்னையில் 42 மெட்ரோ நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது இரண்டு டிவிஎம் எந்திரங்கள் உள்ளன. இப்போது அவைகள் செயல்படவில்லை.
பேருந்துகளில் சென்றால் நீண்ட நேரம் ஆவதால் பலர் மெட்ரோ ரயிலை தேர்வு செய்கின்றனர். ஆனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க டிவிஎம் எந்திரங்கள் வேலை செய்யாததால், வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் வாங்கி செல்கின்றனர். இதனால் நீண்ட நேரம் ஆகிறது" என்றனர்.
இதையும் படிங்க: விளம்பரத்தில் இயங்கி வரும் திமுக ஆட்சி - எஸ்.பி. வேலுமணி