இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மைக் காலமாக, வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை 1.25 கோடியைத் தொடும்.
இந்த வெளிமாநில மக்களை முறைப்படுத்தவும், சட்டம் இயற்றக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வலியுறுத்தி வருகிறோம்.
ரயில்வே, வங்கிகள், அஞ்சலகங்கள், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட மத்திய அரசிற்கு ஒன்றிய அரசுத் துறை பணிகளில் வடமாநிலத்தவர் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறார்கள். தனியார் துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது இல்லாமல், இனம் மற்றும் சாதி பார்த்தே நியமனங்கள் அமைக்கப்படுகின்றன. எனவே அங்கும் தமிழர்களுக்கு இடமில்லை.
இந்த நிலையில்தான் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அரசு, புரட்சிகரமான சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள்,தொழிற்சாலைகள், அரசு-தனியார் கூட்டு நிறுவனங்கள், ஆகியவற்றில் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அதாவது 75 விழுக்காடு வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கே என்ற மசோதா அம்மாநிலத்தின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, உள்ளூர் பணியாளர்களுக்குத் தகுதி மற்றும் திறமை இல்லை என்று கூறி அவர்களைத் தட்டிக் கழித்துவிட்டு வெளியாட்களை பணிக்கு எடுக்கக்கூடாது என்பதற்காக திறனற்றவர்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் திறன் பயிற்சி அளித்து பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது ஆந்திர அரசு.
ஆனால் ஆந்திராவைவிடவும் தமிழ்நாட்டுக்குத்தான் இந்தச் சட்டம் கூடுதல் அவசியம், அந்த அளவுக்கு இங்கு நிலைமை மோசமாகியுள்ளது. அண்மையில் ‘ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அறிவித்தது பாஜக அரசு. அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக, வெளிமாநிலங்களில் போய் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்தியாவுக்குள் எந்த மாநிலத்திலும் இந்த ‘ஒரே ரேஷன் கார்டு’ மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம்”என்றார் உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்.
ஜெகன்மோகன் கொண்டு வந்ததைப் போன்ற சட்டம் தமிழ்நாட்டில் 75 விழுக்காடு அல்ல, 95 விழுக்காடு வேலைவாய்ப்பை மண்ணின் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எனவே தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது நம் மண்ணையும் மக்களையும் அழிக்கத் துடிக்கும் மோடியைக் கழித்துக்கட்டுங்கள்!.
தனியார் துறைப் பணிகளும் மண்ணின் மக்களுக்கே என்று உறுதி செய்யும் ஜெகன்மோகனைப் பின்பற்றுங்கள்” என கூறப்பட்டுள்ளது.
-
நம் மண்ணையும் மக்களையும் அழிக்கத் துடிக்கும் மோடியைக் கழித்துக்கட்டுங்கள்!
— Velmurugan.T (@VelmuruganTVK) July 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
தனியார் துறைப் பணிகளும் மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யும் ஜெகன்மோகனைப் பின்பற்றுங்கள்!
தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!#தமிழக_வேலை_தமிழருக்கேhttps://t.co/azuwZj0DfX pic.twitter.com/KhHjLMtSFm
">நம் மண்ணையும் மக்களையும் அழிக்கத் துடிக்கும் மோடியைக் கழித்துக்கட்டுங்கள்!
— Velmurugan.T (@VelmuruganTVK) July 24, 2019
தனியார் துறைப் பணிகளும் மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யும் ஜெகன்மோகனைப் பின்பற்றுங்கள்!
தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!#தமிழக_வேலை_தமிழருக்கேhttps://t.co/azuwZj0DfX pic.twitter.com/KhHjLMtSFmநம் மண்ணையும் மக்களையும் அழிக்கத் துடிக்கும் மோடியைக் கழித்துக்கட்டுங்கள்!
— Velmurugan.T (@VelmuruganTVK) July 24, 2019
தனியார் துறைப் பணிகளும் மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யும் ஜெகன்மோகனைப் பின்பற்றுங்கள்!
தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!#தமிழக_வேலை_தமிழருக்கேhttps://t.co/azuwZj0DfX pic.twitter.com/KhHjLMtSFm