ETV Bharat / city

ஊரடங்கு காலத்திலும் காச நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை - காசநோய்

சென்னை: ஊரடங்கு காலத்திலும் காச நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar
author img

By

Published : Sep 3, 2020, 1:13 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மொத்தம் 52,489 காசநோயாளிகளுக்கு, அவர்களின் சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள், காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அனுப்பி, ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காசநோயின் தன்மை போன்றவைகள் குறித்து கேட்டறிந்து தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும், காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். அதற்காக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருள்கள் அரசால் வழங்கப்பட்டு சத்தான உணவு கிடைப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திறக்கப்படாத கொள்முதல் கிடங்கு: மழையில் நனைந்து வீணாகும் நெல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.