ETV Bharat / city

குருமூர்த்தியின் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தை காட்டுகிறது - டிடிவி தினகரன் - ஆடிட்டர் குருமூர்த்தி

ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் விமர்சிக்கும் அளவிற்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

TTV Dinakaran condemns Gurumurty
TTV Dinakaran condemns Gurumurty
author img

By

Published : Jan 16, 2021, 1:27 PM IST

சென்னை: துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழாவில் அந்த இதழின் தற்போதை பொறுப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த நிகழ்வில் சசிகலா பற்றி அவரது கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு, பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த சோ, தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும், நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.

அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள் தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக் கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்: அதிமுக ஆட்சியை பிடிக்கும் என ஜோசியர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.