வங்கதேசத்தைச் சேர்ந்த சாமு (27) என்பவர், மருத்துவத்திற்காக விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அப்போது, தனது உடமைகளை வைத்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் காஃபி குடிக்கச் சென்றார்.
அதன்பின் வந்து பார்த்தபோது தனது உடமை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த சாமு, இது குறித்து விமானநிலைய காவல் துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், தனது மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரம், முக்கிய ஆவணங்கள் பையில் வைத்திருந்ததாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த விமான நிலைய காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.