சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு பேருந்தை கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சென்னையில் 69 % பெண்கள் போக்குவரத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலான செயற்குழு கூட்டத்தில் இன்று (ஆக.28) பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "நிறைவடைந்த போக்குவரத்து தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. தவிர, தொழிலாளர்களின் நலனுக்கான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். தற்போது 7வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகவும், தொழிலாளர்களின் சம்பள விகிதம் திருத்தி அமைக்கப்பட்டது. 5 சதவீதமாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. மகளிருக்கான இலவச பேருந்தில் பணியாற்றும் ஊழியர்கள், மழைக்காலத்தில் பணியாற்றிய, கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது.
சென்னையில் 69 % பெண்கள் போக்குவரத்து இருக்கிறது. இந்த மகளிருக்கு இலவச பேருந்து என்பது லாபம் தரும் செயல்பாடாக இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாததாக தமிழகத்தில்தான் இந்த திட்டங்கள் சிறப்பாக உள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம் அடுத்த வருடம் வரும். தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் 4 ஆண்டு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் சிசிடிவி நடைமுறை கொண்டு வரும் பணிகள் நடந்து வருகிறது.
- ஆயினும், இது நெருக்கடியான நிலையில், தமிழகத்தில் பல நெருக்கடி சூழ்நிலை இருந்தாலும், போக்குவரத்து துறையில் உள்ள சிக்கல்களை மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தானியங்கி டிக்கெட் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் தற்போது கொண்டு வந்துள்ளோம். இதைபோல் விரைவில் மற்ற மண்டலங்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மகளிர் பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் மட்டும் வண்ணம் அடிப்பது குறித்து, ஏற்கனவே, தெரிவித்ததுபோல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
- தற்போது அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில், கணக்கீடு நடந்து வருகிறது. அதன்படி ஓட்டுநர், நடத்துனர் எவ்வளவு பேர் தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்து பேசுகையில், ஆம்னி பேருந்து என்பது ஒப்பந்த ஊர்தி, அதற்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். பண்டிகை காலங்களில் மீண்டும் அவர்களுடன் இது தொடர்பாக பேச இருக்கிறோம். அரசு பேருந்தை குறைந்த கட்டணத்தில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தினால் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.
சமீபத்தில் 957 ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்தோம். அதில் 97 பேர் மட்டுமே கட்டணம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் விரும்பி தான் பயணிக்கின்றனர். ஆயினும் 11 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அரசு போக்குவரத்தை நம்பி வந்தவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கத் தயார்... கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேட்டி...