ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1,412 வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம்

சென்னை: தமிழ்நாட்டில் பயணிகள் குறைவாக இருக்கும் 1,412 வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

tn secretariat
author img

By

Published : Jul 16, 2019, 11:54 PM IST

சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பல தொகுதி உறுப்பினர்கள், வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தபடுவதை புகாராக தெரிவித்தனர். அதே போல போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சபா ராஜேந்திரன், நெய்வேலி தொகுதி உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "மக்களின் தனி நபர் வருமானம் பெருக்கத்தின் காரணமாக இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பொது போக்குவரத்து குறைந்துள்ளது. வழித்தட சீரமைப்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பயணிகள் குறைவாக பயணம் செய்த 1,412 வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டீசல் செலவு குறைந்து அரசுக்கு மிச்சம் ஏற்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

Intro:Body:தமிழகத்தில் பயணிகள் அடர்வு குறைவாக இருந்த வழித்தடத்தில் 1412 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரும் பல தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தபட்டதை சுட்டிக்காட்டினர். அதே போல போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சபா ராஜேந்திரன், நெய்வேலி தொகுதி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்களின் தனி நபர் வருமானம் பெருக்கத்தின் காரணமாக இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் இதன் காரணமாக பொது போக்குவரத்து குறைந்துள்ளதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். வழித்தட சீரமைப்பு என்று குழு அமைக்கப்பட்டு அந்தக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பயணிகள் குறைவாக பயணம் செய்த 1,412 வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதன் காரணமாக டீசல் செலவு குறைந்து அரசுக்கு மிச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.