ETV Bharat / city

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்து கொடுக்காதது குறித்து காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Oct 12, 2020, 6:12 PM IST

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து துறைகளில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக கொடுக்க வேண்டும் எனவும் அது குறித்து அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்ததுபோது, 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக ரயில்வே துறை, பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை ஆகியோர் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக். 12) மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நான்காயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வாங்கப்பட்டாலும், ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளதால், எதிர்காலத்தில் இது போன்ற பேருந்துகள் கொள்முதல்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 2005ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் தமிழ்நாடு அரசு இதுவரை செயல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

மேலும், 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாதது குறித்து டிசம்பர் 10ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.