ETV Bharat / city

'திருநங்கை விருது பெற்றதை அரசியல் தலைவர்கள் வரவேற்கவில்லை' - கிரேஸ் பானு வேதனை! - பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்

திருநங்கைகளுக்கு என்று ஒரு தனி விருது வழங்கிய அரசாங்கத்தையோ, விருது வாங்கிய திருநங்கையையோ அரசியல் தலைவர்கள் பாராட்டாதது வருத்தத்தை அளிப்பதாக திருநங்கை கிரேஸ் பானு வேதனை தெரிவித்துள்ளார்.

திருநங்கை விருது குறித்து பேசிய கிரேஸ் பானு

author img

By

Published : Aug 18, 2021, 7:08 AM IST

சென்னை: இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த மூன்றாம் பாலினர் விருதினை திருநங்கை கிரேஸ் பானுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விருது குறித்து திருநங்கை கிரேஸ் பானு நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மூன்றாம் பாலினத்தவருக்கென தனியாக விருது ஒன்றை அறிமுகப்படுத்தி, அதனை நான் வாங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு அங்கீகாரம் நாட்டில் கிடைக்கிறது.

தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை விதையாய் இந்த விருது உள்ளது. மேலும், அரசு நம்மை மதித்து நமக்கான ஒரு அங்கீகாரமாக இந்த விருதை வழங்கியுள்ளது. எந்த மாநிலமும் இதுவரை இதுபோன்று திருநங்கைகளுக்கு விருது வழங்கவில்லை.

இந்தப் பயணம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை தலைமைச் செயலகம், கண்ணகி சிலை, உள்ளிட்ட இடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திப் பெற்றுள்ளோம். தற்போது திருநங்கைகளுக்கு என்று இலவசப் பேருந்து வசதியும், குடும்ப அட்டைகளுக்கு இரண்டு தவணைகளாக இரண்டாயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது.

திருநர் சமுதாயத்திற்கு உரிமை கிடைத்துள்ளதா?

திருநர் சமுதாயத்திற்கு என்று கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலுக்கு என தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்றது. மேலும் சட்டப் போராட்டமும் நடைபெற்றது.

அப்படிப் போராடியதன் மூலம் இந்தியாவின் முதல் காவல் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாஷினி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் மருந்தாளுநராக திருநங்கை சுவேதா ஆகியோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். செவிலியர் படிப்பில் திருநங்கை தமிழ்செல்வி இணைந்துள்ளார்.

இப்படியாக பல்வேறு திருநங்கைகள் போராட்டம் மூலம் உயர்வடைந்துள்ளனர். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்பதற்காக திருநங்கை சமுதாயத்தையும் தயார்படுத்தியும் வருகிறோம்.

திருநர் பாதுகாப்பு

திருநர் சமூகத்திற்கு எதிரான வன்முறை நடந்தால் அதற்கு குரல் கொடுக்கக்கூட யாரும் கிடையாது. வன்புணர்வு, வன்கொடுமைகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கான எதிரொலியாக அமைதியைதான் என் சமூகத்திற்கு மிகப்பெரிய பதிலாக பொது சமூகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

திருநங்கை விருது குறித்து பேசிய கிரேஸ் பானு

இந்த அமைதியும் ஒருவகை தீண்டாமை தான். திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவருமே பாலின உறுதியற்ற குழந்தைகள்தான். பாலின உறுதியற்ற குழந்தைகளுக்கு வன்புணர்ச்சி, வன்கொடுமை உள்ளிட்டவையால் இடைநிற்றல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களை வார்த்தையால் சாதிரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் நிறரீதியாகவும் பேசக்கூடாது என்ற பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது. இதேபோல் திருநர்களை, பாலின உறுதியற்ற குழந்தைகளை கேலி, கிண்டல் செய்யக்கூடாது என்றும் அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் திருநர்களுக்கு உரிமை இருந்தால் பாலின உறுதியற்ற குழந்தைகளை பெற்றோர்கள் வெளியே விட மாட்டார்கள். இதற்கான முன்னெடுப்பை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் தலைவர்கள் வரவேற்கவில்லை

திருநங்கைகளுக்கு என்று தனி ஒரு விருது வழங்கிய அரசாங்கத்தையோ, விருது வாங்கிய திருநங்கையையோ அரசியல் தலைவர்கள் பாராட்டாதது வருத்தம் அளிக்கிறது. முதலில் இந்த மனநிலை மாற வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடும் திருநங்கைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு என்று முறையாக பயிற்சியளித்து, அவர்கள் வாழ்வில் முன்னேற வழிவகை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.