ETV Bharat / city

மேம்பாலத்தில் சிக்கிய ட்ரான்ஸ்பார்மர்: வெல்டிங் வைத்ததால் பற்றி எரிந்த தீ! - chennai fire news

சென்னை: பாலத்தின் கீழ் சிக்கிய டிரான்ஸ்பார்மரை வெல்டிங் வைத்து அகற்ற முயன்றபோது தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ட்ரான்ஸ்பார்மரில்  பற்றி எரிந்த தீ!
ட்ரான்ஸ்பார்மரில் பற்றி எரிந்த தீ!
author img

By

Published : Dec 16, 2020, 2:53 PM IST

சென்னை துறைமுகத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு 32 சக்கரம் கொண்ட ட்ரைலர் லாரி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் மேம்பாலத்திற்கு கீழ் சென்றபோது, பாலத்தின் கீழ் டிரான்ஸ்பார்மர் சிக்கியது. டிரைவர் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை எடுக்க முடியவில்லை. பாலத்தின் உயரத்திற்கு லாரியில் வைக்கப்பட்டுருந்த டிரான்ஸ்பார்மர் இருந்ததால் மேம்பாலத்தில் வாகனம் சிக்கி அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே நின்றுது.

வாகனத்தை அங்கிருந்து அகற்ற கிரைன் மற்றும் இரண்டு புல்லர் லாரிகள் மூலம் போக்குவரத்து காவல் துறையினர் முயற்சி செய்தனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் பாலத்தின் கீழ் வாகனம் சிக்கிக்கொண்டதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

ட்ரான்ஸ்பார்மரில் பற்றி எரிந்த தீ!

இந்நிலையில், ட்ரஸ்பார்மர் மேம்பாலத்தில் சிக்கிய மேல் பகுதியை வெல்டிங் வைத்து அகற்ற காவல் துறையினர் முயற்சி செய்தனர். அப்போது டிரான்ஸ்பார்மர் உள்ளிருந்த திரவத்தில் தீ பற்றி எரிந்தது. எனினும் வாகனத்தை பின்னோக்கி இழுத்து அகற்றினர். இதனால் சுமார் நான்கு மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்துவந்த போக்குவரத்து சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இதையும் படிங்க...சிலிண்டர் விலை உயர்வு: திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.