சென்னை: மூன்று துணை பதிவாளர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,
- சென்னை ஆலந்தூரில் துணை பதிவாளராக இருந்த ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- தஞ்சாவூர் பதிவு மாவட்டம் வல்லம் எனும் இடத்தில் துணை பதிவாளராக இருந்த எஸ். மனோன்மணி, திருச்சி கண்காணிப்பாளராக (அசல் ரெக்கார்ட்ஸ் கிளை) மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை (தெற்கு) பதிவு மாவட்டம், பம்மல் துணை பதிவாளராக இருந்த பி.தினேஷ், திருநெல்வேலி பாளையங்கோட்டை கண்காணிப்பாளராக (அசல் ரெக்கார்ட்ஸ் கிளை) மாற்றப்பட்டுள்ளார்.
என அறிவிக்கப்பட்டுள்ளது.