இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பொறுப்பு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (ஏ.ஐ.ஜி.பி) பணியாற்றி வந்த சுதாகர் சென்னை சைபர் கிரைம் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![TRANSFER OF 7 IPS OFFICERS GOVERNMENT OF TAMIL NADU ORDER](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tnorder-7209106_15122020195203_1512f_1608042123_857.jpg)
ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராக பணியாற்றிவந்த அமரேஷ் புஜாரி சென்னை தகவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.,யாக பிராஜ் கிஷோர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் அயல் பணியிலிருந்து தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி சந்தீப் மிட்டல், விரிவாக்கப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு காவல் தலைமையக ஐ.ஜி.,யாக ஜோஷி நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமையிடத்து ஐஜியாகப் பதவி வகித்துவந்த செந்தாமரைக் கண்ணன் சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது