ETV Bharat / city

'பொதுமக்களின் வேண்டுதலால் திரும்பிவந்துள்ளேன்' - சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பேட்டி

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய டி.ராஜேந்தர், 'ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிரார்த்தனையால் பழைய தெம்போடு உணர்வோடு வந்திருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் வேண்டுதலால் திரும்பி வந்துள்ளேன் - சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பேட்டி

author img

By

Published : Jul 22, 2022, 7:36 AM IST

சென்னை: நடிகரும்,இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 14ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து இன்று (ஜூலை 22)அதிகாலை 4 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை வந்த டி.ராஜேந்தரை இலட்சிய திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.ராஜேந்தர், ‘ டி.ராஜேந்தர் என்று சொன்னால் தன்னம்பிக்கை என்பார்கள். ஆனால், நான் இந்த இடத்தில் நிற்பதற்கு கடவுள் நம்பிக்கை தான் காரணம். என் மீது அன்பும் மனிதநேயமும் வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இவர்களுடைய பிரார்த்தனையின் பலன் தான் எனக்கு சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம்போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டிலேயே சிகிச்சைப்போதும் என்றேன். ஆனால், என் மகன் அமெரிக்காவில் சிகிச்சைக்கு வலியுறுத்தியதால் சென்றேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அமெரிக்காவுக்குச்சென்றேன். அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கத்தினர் மிகுந்த அன்பைக்காட்டினார்கள். தற்போது நன்றாகிவிட்டது என்னுடைய இதயம். நான் எதிர்கொண்டு இருப்பது உதயம். அமெரிக்கா செல்ல உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி’ எனக் கூறினார்.

பொய் பரப்பிய ஊடகங்கள்: 'கடந்த மாதம் சிகிச்சைப்பெற்று வந்ததிலிருந்து ஒரு சில யூட்யூப் சேனல்கள் நான் மறைந்து விட்டதாக பொய் செய்திபரப்பின. ஆனால், நான் தற்போது குணமடைந்துவிட்டேன். இதற்கு கடவுள் நம்பிக்கையே காரணம்' எனத் தெரிவித்தார், டி.ராஜேந்தர்.

பொதுமக்கள் வேண்டுதலால் திரும்பி வந்துள்ளேன் - சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பேட்டி

இதனைத்தொடர்ந்து சிம்புவிற்குத் திருமணம் எப்போது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘இருமனம் ஒன்றுபட்டால் திருமணம் என்று கடவுள் எழுதியது தான் நடக்கும். காலச்சக்கரம் சூழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள்.

மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள். எங்கள் இல்லத்திற்கு நல்ல குணமுடைய திருமகள்,மருமகள் வருவாள். கடவுள் மீது நம்பிக்கை எனக்கு உள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதல் படமே பிரமாண்டமாக வெளியாகிறது - மாஸ் காட்டும் 'லெஜண்ட்' அண்ணாச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.