மதுரை: ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை அக்டோபர் 20, 27 ஆகிய புதன்கிழமைகளில் விழுப்புரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
இந்த நாள்களில் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.
வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை நவம்பர் 10ஆம் தேதி புதன்கிழமை அன்று செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
இருந்தபோதிலும் நவம்பர் 10ஆம் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல இயங்கும்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை