அதிமுக, அமமுக சார்பாக சென்னையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இன்று (பிப். 24) கொண்டாடப்படுகிறது. மேலும், அரசு விழாவாகவும் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
அதேபோல், திமுகவில் இன்று விருப்ப மனு தாக்கல்செய்ய கட்சியினர் வருகைதந்தனர். மேலும் பரப்புரைப் பாடல்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
வாகன நெரிசலால் வாகனங்கள் நிறுத்திவைப்பு இவ்விரண்டு நிகழ்வுகளும் அண்ணா சாலையில் அமைந்துள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதனால் தேனாம்பேட்டை முதல் ஆயிரம் விளக்கு வரை சாலைகள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன.
அரசியல் கட்சி நிகழ்ச்சிகளால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ராஜிவ் காந்தி சாலை-ஓஎம்ஆர், அடையாறு சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், நந்தனம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலையில் காத்திருக்கும் தொண்டர்கள் சாலையில் ஊர்ந்து செல்வதால் ஏராளமான பெட்ரோல் வீணாவதாகவும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ள சூழலில் இது தங்களுக்குப் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சென்னை இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனை கட்டாயம்