ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@9AM - etvbharat

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 14, 2021, 9:17 AM IST

1. 10 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவரம் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களில், எத்தனை பேர் படிப்பைப் பாதியில் கைவிட்டனர் என்ற விவரங்களை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2. தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல்

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

3. வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டு கோயில் சிலைகள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்நாட்டு கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

4. மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 60 % ஆக உயர்வு

அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பயணிகளின் எண்ணிக்கை 40 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

5. நீட் தேர்வு தேதி அறிவிப்பு - தமிழ்நாடு மாணவர்களின் நிலை என்ன?

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

6. காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த துர்கா ஸ்டாலின்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

7. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தற்போதைய தேவை - ஹன்ஸ் ராஜ் வர்மா

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் தற்போதைய தேவை என தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

8. ராகுல் - பிகே திடீர் சந்திப்பு; அடுத்த வாண வேடிக்கை வட இந்தியாவில்...

தேர்தல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷார், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியை இன்று (ஜூலை 13) சந்தித்துள்ளார்.

9. புதுச்சேரியில் கரோனா பரவும் இடர்

புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதால் கரோனா பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

10. பழநிபாரதி - கரும்பாறை மனசில் மயில் தோகை விரிப்பவர்

இளையராஜாவுக்கு அவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே மிகச்சிறந்த தரத்தில் இருப்பவை. ஆனால் ராஜா பாட்டில் பழநிபாரதி ராஜபாட்டை நடத்தியது இரண்டு பாடல்களில். ஒன்று, ’வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது’. இரண்டு, ’இளங்காத்து வீசுதே’.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.