ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Sep 18, 2021, 9:03 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி
இரவு 9 மணி

1.சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பேன்- தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்ற ஆர்.என். ரவி, ஆளுநராக செயல்பட தனக்கு சில சட்ட திட்டங்கள் உள்ளதாகவும், அந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தன்னால் இயன்றதை மக்களுக்கு செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

2.ஊரக உள்ளாட்சி தேர்தல் - பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுலர்களை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3.புதுமாப்பிள்ளை கார் மோதி உயிரிழப்பு - சிசிடிவி வைரல்!

அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை கார் மோதி உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

4.அதிமுகவின் புதிய பதவிகள் தீர்மானத்தை ரத்து செய்ய கோரி வழக்கு

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5.'உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது சந்தேகம்' - தளவாய் சுந்தரம்

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது சந்தேகம் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

6.தேங்காய் எண்ணெய்க்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

தேங்காய் எண்ணெய்க்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

7.படகு இல்லாத மீனவர்களுக்கு கிசான் அட்டை - எல். முருகன் தகவல்

படகு இல்லாத மீனவர்களுக்கு கிசான் அட்டையை ஒன்றிய அரசு வழங்க உள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

8.விமான நிலையத்தில் பாரதியார் பாடல் பாடிய மாணவ,மாணவிகள்

பாரதியார் நூற்றாண்டு நினைவு விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பாடல்கள் பாடி இசைக் குழு மாணவ, மாணவிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொலி வைரலாகி வருகிறது.

9.குன்னூரில் தஞ்சமடைந்த வௌவால்கள்- நிபா அச்சத்தில் மக்கள்

முதல்முறையாக வௌவால்கள் அதிகளவில் குன்னூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நிபா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

10.எண்ணூர் அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு!

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.