1. பிடி உஷா பயிற்சியாளர் காலமானார்
பிடி உஷா பயிற்சியாளர் ஓம் நம்பியார் காலமானார். அவருக்கு வயது 89.
2. நீதிபதி கிருபாகரன் நாளையுடன் பணி ஓய்வு - அவர் அளித்த முக்கிய தீர்ப்புகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய மூத்த நீதிபதி என். கிருபாகரன் நாளை (ஆக 20) பணி ஓய்வு பெறுகிறார்.
3. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.
4. தமிழ்நாட்டில் 1,702 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 1,702 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள் மாற்றம் - அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், இணை இயக்குநர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6. வாய்தா மேல் வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜி: கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
7. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி - சபாநாயகர்
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினிப் பயிற்சி வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு இன்று (ஆக. 19) நடைபெற்ற பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.
8. ஜம்மு காஷ்மீரில் ஆப்னி கட்சித் தலைவர் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இன்று (வியாழக்கிழமை) ஆப்னி கட்சித் தலைவர் குலாம் ஹாசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
9. ஹைதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குழந்தைகள்- யுனிசெஃப் கவலை
ஹைதியில் கடந்த 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 5 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வயதிற்குள்பட்ட 1,67,000 குழந்தைகள் உள்பட 3,85,000 பேர்களின் அவசர தேவைகளுக்கு உதவ 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்றும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
10. மறுபடியும் முதலில் இருந்தா? புது தாலியுடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி
பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார் . அதை பார்த்த நெட்டிசன்கள் மறுபடியும் முதலில் இருந்தா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.