1. பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது - சிபிஐ அதிரடி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அருண்குமார் என்பவரை சிபிஐ காவலர்கள் கைது செய்து இன்று (ஆக. 13) மாலை கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
2. ரேஷன் அட்டையில் பெயர் மாற்ற தேவையில்லை - நிதி அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர்கள் தங்களது பெயரை மாற்ற தேவையில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
3. ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. கிராமப்புறங்களில் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு!
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 924 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க, கிராமப்புறங்களில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 3 ஆயிரத்து 548 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
5. தமிழ்நாடு பட்ஜெட் இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த கலவை - ராமதாஸ்
தமிழ்நாடு பட்ஜெட் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த கலவையாக உள்ளது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6. ஆந்திராவின் கிருஷ்ணா நதிநீர், குழாய் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்படுமா?
ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் 153-கிமீ கொண்ட தூரத்திற்கு குழாய் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்படுமா என நீரியல் நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
7. ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை
2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
8. ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் இடமாற்றம்
ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது ஒரு தலைபட்சமான நடவடிக்கை எனப் புகார் எழுந்த நிலையில், ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அமெரிக்காவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. ENG vs IND LORDS TEST: ஆண்டர்சனுக்கு 5 விக்கெட்டுகள்; இந்தியா ஆல்-அவுட்
லார்ட்ஸ் டெஸ்டில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் இங்கிலாந்து அணி, இந்தியாவை 364 ரன்களில் ஆல்-அவுட்டாக்கியுள்ளது.
10. 100 மில்லியனைக் கடந்து அடிச்சி தூக்கிய தல அஜித் பாடல்..!
'தல' அஜித்தின் விஸ்வாசம் படத்தில் உள்ள 'அடிச்சி தூக்கு.. அடிச்சி தூக்கு' பாடல் யூ-ட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.